February 13, 2020
கோவையில் 12 இலட்சம் மதிப்பீட்டில் குளங்கள் தூர்வாரும் பணியை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் SP அன்பரசன் பூமிபூஜையுடன் துவக்கி வைத்தார்.
கோவை செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள குட்டைகளான மணியகாரன் குட்டை, கந்தன் குட்டை, முத்தாலா குட்டை, உருமாண்டி குட்டை, போன்ற குட்டைகள் தற்போது 5 இட்சம் லிட்டர் கொள்ளளவு மட்டுமே தண்ணீர் நிரம்பும் நிலை உள்ளது. ஆகவே இந்த குட்டைகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகளை கோவை சிட்கோ அரிமா சங்கமும், நல்லறம் அறக்கட்டளையும் இனைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் மூலம் 35 இலட்சம் லிட்டர் முதல் 45 இலட்சம் லிட்டர் தண்ணீர்வரை சேமிக்கமுடியும்.
மேலும் இதனால் செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், இபகுதியில் உள்ள விவசாய பயன்பாட்டிற்க்கும் பயன்படும் என இப்பகுதிமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இந்த விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர், மற்றும் சிட்கோ அரிமா சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.