• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்தில் பணத்தை திருட முயன்ற பெண் கைது

February 12, 2020

கோவையில் அரசு பேருந்தில் பெண்ணிடம் பணத்தை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி அருகில் உள்ள சின்னசாமி நகரைச் சேர்ந்த சூரியகலா இவர் கணபதியில் இருந்து மதுக்கரை நோக்கி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இவர் தனது கைபையில் 72 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். பேருந்து மரக்கடை அருகே சென்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு பெண் கைபையை பறித்து தப்பி இறங்க முயன்றாள்.

சூரியகலா கூச்சலிட்டதால் பஸ்ஸில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அவர் மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த லதா என தெரியவந்தது. இவரை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.இந்தப் பெண் கோவையில் நடக்கும் கோவில் விழாக்களில் நகை பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. நகை பறிப்பு திட்டம் நிறைவேறாத நிலையில் பேருந்துகளில் கூட்டநெரிசலில் பயணிகளிடம் பணம் உள்ள பேக்கை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டபோது சிக்கியுள்ளார்.

மேலும் படிக்க