• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல் ஏ

February 11, 2020

கோவை ஒண்டிப்புதூரில் சாலைகளை செப்பனிட பல முறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து நா.கார்த்திக் எம்எல்ஏ நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும், சாலை கழிவுகள் தேங்கி கிடக்கின்றது. இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் பல முறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.

இந்நிலையில், அந்த மோசமான சர்வீஸ் சாலைகளை ஆய்வு செய்த நா.கார்த்திக் எம்எல்ஏ, கோவை மத்திய சிறை முன்பு உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், கோட்ட கணக்காளர் பீரான் ஆகியோர் சமரச செய்தனர். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள், 10 நாட்களுக்குள் பராமரிப்பு பணி மேற்கொள்வதாகவும், புதிய சாலை நிதி தாமதம் ஆனால், கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி நிதி பெற்று பணியை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் படிக்க