February 10, 2020
தண்டோரா குழு
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பானா ‘ஆல்ட்ரோஸ்’ காரை எஃப் ஒன் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கோவையில் அறிமுகப்படுத்தினார்.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ‘ஆல்ட்ரோஸ்’ (ALTROZ) என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியது. என்.சி.ஏ.பி ரேட்டிங்கில் 5 ஸ்டார்களை பெற்ற இந்த கார் இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இந்த காரின் அறிமுக விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி டாடா நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் எஃப்.ஒன் கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு காரை அறிமுகம் செய்து வைத்தார்.