• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிபோதையில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் கைது

February 10, 2020

கோவையில் குடிபோதையில் தனியார் பள்ளி வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தனியார் வாகன ஓட்டுனரை போலிசார் அழைத்துச் சென்றனர்.

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கிவரும் தனியார்பள்ளியில் படிக்கும் மாணவர்களை, பள்ளிக்கு அழைத்துவரும் பணிக்கு தனியார் வாகன உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கோவை விஜயயலட்சுமி மில்ஸ், நரசிம்மபுரம் பகுதியில் மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த வாகனம் நிலை தடுமாறி வீட்டின்முன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது ஏற்றி நிறுத்தியதால் பொதுமக்கள் குவிந்தனர் அதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்து வந்த குணியமுத்தூர் போலீசார் ஓட்டுனரை விசாரித்ததில் அவர் பெயர் முருகேசன் எனவும் அவர்குடிபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவருகிறது. எனவே போலீசார் வாகனத்தை பரிமுதல் செய்து ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பள்ளிவாகன ஓட்டுனர். குடிபோதையில் வாகனம் இயக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

மேலும் படிக்க