• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிபோதையில் தாய் தந்தையை வெட்டிக் கொன்ற மகன் தலைமறைவு

February 8, 2020

குடிக்க பணம் தராத வயது முதிர்ந்த தாய் தந்தையை குடிபோதையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்துரை, இந்திரா காலனி, விராலியூர் வெள்ளமலை பட்டினம் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரம் ( வயது 75), இவருடைய மனைவி துளசி (70,) கூலிவேலை செய்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு கார்த்தி என்ற 31 வயது மகனும் மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடிக்கு அடிமையான மகன் கார்த்திக் அடிக்கடி தாய் தந்தையிடம் வந்து குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வது வழக்கம். நேற்றுமாலை இதே போல குடிக்க பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்தி அதிகாலை 1 மணியளவில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த தாய் தந்தையரை குடிபோதை வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

கார்த்திக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அதிகாலை விடிந்தும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அருகில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளும் கிடந்தது. போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்த மகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க