February 7, 2020
தண்டோரா குழு
கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வுவில் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவி மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் கடந்த 2019 மே மாதம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவி அ.லூமன் கிறிஸ்டி M.Ed தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 05.02.2020 அன்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சான்றிதழ்களும், ஊகத்தைத்தொகையும் வழங்கப்பட்டு பாராட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தில் பிறந்து அரசு கல்லூரியில் பயின்று இவ்வாறு சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.