February 7, 2020
தண்டோரா குழு
கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேரை கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டையில் விற்பனை செய்வதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்போரில் கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகப்படும்படி சுற்றிய இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
இது சம்மந்தமாக கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சன்ட் கூறும்போது,
போதை மாத்திரைகள் போதைப்பொருள்கள் தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தோம். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தீபக் வயது 23 மற்றொருவர் பாலக்காடு சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து எம் டி எம் கே போதை மாத்திரைகள் 200 மில்லி கிராம். மேலும் ஸ்டம்பில் போதை மருந்து தடவப்பட்ட 20 அட்டைகளையும் பறிமுதல் செய்தோம். இதன் சர்வதேச மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு உடையது.கோவாவில் இருந்து இவற்றை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி உள்ள ஒரு தென்னை தொப்பில் கல்லூரி மாணவர்கள் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட 163 பேர் போதை மருந்து பயன்படுத்தி உல்லாசமாக இருந்தனர்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுஜித் குமார் தலைமையில் திடீர் சோதனை நடத்தியபோது தீபக்கும்,ஜித்தும் தப்பி ஓடிவிட்டனர் இப்போது இவர்களை இருவரையும் கைது செய்தோம் எம் டி எம் ஏ என்ற இந்த போதை மருந்தை உட்கொள்பவர்களுக்கு 6 மணி நேரம் போதை இருக்கும் என்றும் சிறுநீரகம் கல்லீரல் பாதிக்கப்படுவதுடன் இதய அடைப்பை ஏற்படுத்தும் என்று கூடிய தன்மை உள்ளது. இந்த போதையை அடிக்கடி உட்கொள்பவர்கள் மூளை கோளாறினாலூம் பாதிக்கப்படுவார்கள் என்றார்.