• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியுரிமை சட்டத்திருத்த எதிராக கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கையெழுத்து இயக்கம்

February 7, 2020

குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் சார்பில் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு வருகின்றது.இதேபோல், கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், ஆத்துப்பாலத்தில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் காதர் தலைமையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி துவக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடத்தில் கையெழுத்து பெறப்பட்டது.

பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கையெழுத்திட்டனர்.இதைத்தொடர்ந்து, மாநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட போத்தனூர், கவுண்டம்பாளையம் பகுதிகளிலும் கையெழுத்து இயக்கத்தை முத்துசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், பகுதி கழக பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், குனிசை லோகு, முன்னாள் நகராட்சி தலைவர்கள் குறிச்சி பிரபாகரன், ராஜமாணிக்கம், உதயக்குமார், மகாலிங்கம், பிலீப், நிசார், ரமணி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க