• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

February 5, 2020

கோவையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் போயர் வீதி சேர்ந்தவர் அர்ஜுன் இவர் 2017ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சேர்ந்த ரமேஷ் என்பவரை ஆலாந்துறை க்கு கடத்திச் சென்று கொலை செய்து ஆற்றில் புதைத்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்.இவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இவருடைய பெயர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி திருவாடனை சேர்ந்த பார்த்திபன் என்பவரை வரதராஜ புரத்தில் வைத்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 5300 பறித்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இவர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்தார். அதற்கான உத்தரவுகளை சிங்காநல்லூர் போலீசார் சிறை துறை அதிகாரிடம் வழங்கினர் இதனையடுத்து அர்ஜுன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க