• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பாராமெடிக்கல் கல்லூரி மாணவ,மாணவியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

February 4, 2020

கோவையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பாராமெடிக்கல் கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவையில் பி.பி.ஜி.கல்லூரி கல்லூரி மற்றும் அஸ்வின் மருத்துவமனை சார்பாக உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவமனை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் முருகன் ராமதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தங்கவேலு,

தற்போது புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து உள்ளதாகவும்,எனவே மக்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் தகுந்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் அறியும் விதமாக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார்.

காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக்கிலிருந்து துவங்கிய ஊர்வலம் கோவை வ.ஊ.சி மைதானம் வரை சென்றது.இந்த ஊர்வலத்தில் ,பாராமெடிக்கல் மாணவ, மாணவியர்கள் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் , அஸ்வின் மருத்துவமனை புற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் நிதின்,அன்பு உட்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்,ஊர்வலத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைளை ஏந்தியும், கோஷம் எழுப்பியும்,விழிப்புணர்வு நோட்டீசுகளை பொதுமக்களுக்கு வழங்கியபடி சென்றனர்.

மேலும் படிக்க