• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் மாசு ஏற்படுத்தி வரும் தனியார் ஆலையை மூட கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 3, 2020

கோவையை அடுத்த சூலூர் முத்து கவுண்டன் புதூரில் நிலம்,நீர்,காற்று என அனைத்து நிலைகளையும் மாசு ஏற்படுத்தி வரும் தனியார் ஆலையை மூட கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கோவை,சூலூர் பகுதி அருகில் உள்ள முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் எங்களது பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசி மற்றும் கழிவால் நிலம்,நீர்,காற்று போன்ற முக்கிய நிலைகள் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை நுரையீரல் பாதிப்பு மூச்சுத்திணறல் போன்ற நோயால் பாதிப்படைந்து வருகின்றனர். இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பேசுகையில்,

தொடர்ந்து பல முறை புகார் அளித்தும் அலைகழிக்ப்பட்டு வருவதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க