• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் என்ன நடக்கிறது – சீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி பேட்டி

February 1, 2020

கொரானோ வைரஸ் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உணவு தட்டுப்பாடு __ நோய் தொற்று பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மாஸ் கூட இல்லாமல் இருப்பதாக சீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி கூறியுள்ளார்.

கோவைமாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த வர் அனுஸ்ரீ மற்றும் அபிநயா ஸ்ரீ ஆகிய சகோதரிகள்,இவர் சீனாவில் உள்ள சாங்கி சீ புரோவின்ஸ் சியான் மகானத்தில் மருத்துவம் பயின்று வந்தார். இவருடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலை கழகத்தில் படித்து வந்த நிலையில் தற்போது அங்கு வேகமாக கொரானோ வைரஸ் பரவிவருவதால் அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்த இந்தியா வர மிகவும் சிரமபட்டு வந்ததாக கூறினார்.

இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யபட்டதால் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார். மாணவி அனுஸ்ரீ மேலும் அங்கு தங்கியிருந்த போது கொரானோ வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடியதாகவும் கடைகள் அனைத்தும் அடைக்கபட்டு பொருட்களை வாங்க கடைகள் ஏதும் செயல்படாததால் உணவு தட்டுப்பாடு என்பது கடுமையான இருந்ததாக கூறினார். அத்துடன் கொரானோ வைரஸ் தடுக்க என்95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ் ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறினார். பெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லாமல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது சீனாவில் இருந்து மலேசியா வழியே திருச்சி வந்து கோவை வந்ததாக கூறிய மாணவிகள் விமான நிலையத்தில் வந்த போது தங்களை பரிசோதனை செய்து நோய் குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தனர்

மேலும் படிக்க