• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – 5 பேருக்கு தலா இரட்டை ஆயுள்

January 31, 2020

பட்டப்பகலில் பழிக்கு பழியாக நடந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – 5 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 22-09-2017ல் செல்வபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாநகராட்சி கழிவறை அருகே ஆனந்தகுமார், செல்வராஜா ஆகிய இருவரை மதிய நேரத்தில் பட்டப்பகலில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சி.சூர்யா , ஆர்.சூர்யா,
மோகன்ராஜ் , விக்னேஷ்குமார், விஜயராஜ் ஆகிய 5 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளான 5 பேரின் நண்பரான வினோத்குமார் என்பவரை 02-06-2017 கொலை செய்ததால், பழிக்கு பழி என்ற விதத்தில் இருவரை இந்த 5 பேர் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க