• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் எதிரொலி : தமிழகத்தில் 78 பேர் கண்கானிப்பில் உள்ளனர்

January 31, 2020

கொரோனா வைரஸ் எதிரொலி : தமிழகத்தில் 78 பேர் கண்கானிப்பில் உள்ளனர் என பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தை சாமி கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர்,

‘கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சார்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். கொரோனோ வைரஸ் கைகளின் மூலமாகாவும், இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகின்றது. எனவே, கைகளை தினமும் 15 முறையாவது கழுவ வேண்டும், கை வைக்க கூடிய இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும், தும்மும் போது மூக்கை கை குட்டைகளால் பொத்திக்கொள்ள வேண்டும். முதியவர்களும், ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளையும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

விரைவில் தமிழகத்திலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் அமைக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல். முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.’ என்றார்.

மேலும், ‘சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீடுகளில் வைத்து கண்கானிக்கப்படுவார்கள். சலி, இருமல், காய்ச்சல் தான் அறிகுறிகள், எனவே அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் கைகுலுக்குவதை தவிர்த்து, நமது பாரம்பரிய முறையில் வணக்கம் சொல்வதே சிறந்தது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க