• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமிக்கு ஒடிசா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்

January 30, 2020

ஏழை எளிய மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு உதவியாக இருந்த கேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமி அவர்களுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

கோவை அரசூர் பகுதியில் கேபிஆர் தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல சமூக சேவை புரிந்து, தனது மில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு படிப்பு, தொழில் வழங்குவது மட்டுமல்லாது, ஐஏஎஸ் அகாடமி, கல்வி நிறுவனங்கள் உள்பட பல வகைகளில் ஏழை எளிய தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவிகரமாக இருந்தமைக்கு, கடந்த வாரம் ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் சார்பில் கேபிஆர் குழுமத்தின் சேர்மன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதற்கு பாராட்டு விழா கேபிஆர் கல்லூரியின் கலையரங்கில் இன்று நடைபெற்றது. கேபிஆர் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, விழாவில் சிறப்பு விருந்தினராக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி கலந்து கொண்டார். எழுத்தாளர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க