• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் – ரஜினி

January 29, 2020 தண்டோரா குழு

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபராக பதவிவகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்று உள்ளார். இந்நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த பயணத்தில் ரஜினிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என்றும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முள் குத்தி விட்டது என்று கூறினார்.

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் In to The Wild எனும் புதிய ஷோவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பியர் கிரில்ஸ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சி மற்றும் மேன் VS வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்சிற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்றும் ரஜினி கூறியுள்ளார்.

மேலும் படிக்க