• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சுந்தராபுரம் அருகே அரசு சாலையில் 8 கடைகளை அடைத்து கம்பி வேலி அமைத்ததால் பரபரப்பு

January 28, 2020

குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சுந்தராபுரம் அருகே அரசு சாலையில் 8 கடைகளை அடைத்து கம்பி வேலி அமைத்ததால் பரபரப்பு, குனியமுத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை குறிச்சி சுந்தராபுரம் அருகே செங்கப்பகோணர் என்பருக்கு சொந்தமான நிலத்தில் 8 கடைகள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 10 லிருந்து 30 வருடங்களுக்கும் மேலாக வணிகர்கள் கடை வைத்துள்ளனர். மேலும் இந்த கடை வாடகையை செங்கப்பகோணார் மூத்த மகனான மருதாச்சலம் என்பவரிடம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவரது இளைய மகன் பூபதி யாதவ் தன்னிடம் வாடகையை கொடுக்குமாறு வணிகர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் வழக்கம் போல் மருதாச்சலத்திடம் வாடகையை கொடுத்ததால் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கோவை – பொள்ளாச்சி சாலையில் கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.

இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நடைபாதையும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் செல்ல முடியாமல் சாலைகளில் இறங்கி செல்கின்றனர். தகவலறிந்து அங்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக போடப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வேலி அமைத்த பூபதி யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பூபதி யாதவ் மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிழுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க