• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

22 வயது இளைஞருடன் 6௦ வயது மூதாட்டி காதல்!

January 25, 2020

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்திற்கு வினோதமான புகார் ஒன்று வந்தது. இந்த புகாரை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த புகார் மனுவை ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில்,தன் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்புகாரை பார்த்து அஅதிர்ச்சியடைந்த போலீசார் மூதாட்டி, இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது, காவல் நிலையம் வந்த மூதாட்டியும் இளைஞனும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் போலீசாரிடம் கூறினர். இது தவறான முடிவு இது போன்று செய்யக்கூடாது என்றும் இருவரும் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றும் குடும்பத்தினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறினர்.

ஆனாலும், அதை ஏற்காமல் இருவரும் பிடிவாதம் பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

மேலும் படிக்க