• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து பேசவேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

January 21, 2020

பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து பேசவேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் தான் நடத்திய ஊர்வலத்தில்ராமன் சீதை சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று செருப்பால் அடித்ததாக துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு குரல் எழுந்தது. ஆனால் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் கருத்து பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
“நண்பர் ரஜினி அரசியல்வாதியல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பி, வேண்டிக் கேட்பது, 95 ஆண்டுகாலம் தமிழினத்திற்காக வாழ்ந்து போராடிய பெரியாரைப்பற்றி பேசும்போது யோசித்து, சிந்தித்து பேச வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க