• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி

January 21, 2020

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து குறிப்பிட்டு பேசினார். அம்மாநாட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார். ஆனால் இதனை மறுத்த பெரியார் ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுமட்டுமின்றி ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சென்னையில் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

1971-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த அவுட்லுக் இதழ் ஆதாரமாக உள்ளது.ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பரட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. என் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது; வருத்தம் தெரிவிக்க முடியாது. இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்” என்றார்.

மேலும் படிக்க