• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

January 17, 2020 தண்டோரா குழு

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைவிட கோரியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில் செல்வபுரம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தேசிய கொடிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மத்திய, மாநில
அரசுகளை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.

சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க