• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் விமர்சியாக நடைபெற்ற யானை பொங்கல்

January 16, 2020 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ஆம்தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வும் மகிழ்ச்சியும் அடைந்து வருகின்றன.யானைகளுக்கு தினசரி காலை மாலை 2 வேளையும் நடைப்பயிற்சி அளிக்கப்படுகின்றன.ஷவர் மற்றும் குளியல் மேடைகளில் பாகன்கள் யானைகளை குளிக்க வைக்கின்றனர்.

இந்நிலையில் முகாம் தொடங்கி 31 வது நாளான இன்று யானை பொங்கல் கொண்டப்பட்டது. இன்று மாட்டு பொங்கல் முன்னிட்டு முகாமில் உள்ள யானைகளுக்கு யானை பொங்கல்லிட்டு கொண்டாடினார்கள் இங்குள் விநாயர் கோவில் முன்பாக யானை நிறுத்தபட்டு புது பானையில் பச்சரிசி வெல்லம் இட்டு பொங்கல் வைத்தனர் பொங்கல் பொங்கி வந்த போது யானைகள் பிளிரி சத்தமிட்டு பொங்கலை வரவேற்று மகிழ்ந்தன இந்த யானை பொங்கல் முகாமை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க