• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப்பேருந்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

October 12, 2016 தண்டோரா குழு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் பயணம் செய்த வாலிபரை மர்ம நபர்கள் துப்பாகியால் சுட்டுக்கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், நாகர்கோவிலிருந்து சாத்தூர் வழியாக கோவை செல்லும் பேருந்தில் இன்று காலை சென்றுக் கொண்டிருந்தார். சாத்தூர் அருகே படந்தால் சோதனைச்சாவடி நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்போது மர்மநபர்கள் இருவர், கருப்பசாமியை துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பியோடினர். இதில், ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி அங்கேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், இது குறித்து விசாரணை நடத்தினார். மேலும், கைரேகை நிபுணர்களின் உதவியுடன், போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொடூரம் நடந்திருக்கலாம் என கருப்பசாமி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சாத்தூர் அருகே அரசுப்பேருந்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 டிஎஸ்பிக்கள், மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி.ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க