• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவள்ளுவர் குறித்து பிரதமர் மோடி தமிழில் டுவீட் !

January 16, 2020

உலகத்தின் ஒப்பற்ற நூலனா திருக்குறளை உருவாக்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல தலைவர்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.

மேலும் படிக்க