• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் போகியை விழிப்புணர்வுடன் கொண்டாட வேண்டும் – இந்திய மருத்து சங்கம்

January 13, 2020

போகியில் பொருட்களை எரிக்க கூடாது என கடந்த ஆண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துயதால், போகி அன்று சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்ததாக இந்திய மருத்து சங்கம் ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை மற்றும் மாசுகாட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

அப்போது பேசிய ஐ.எம்.ஏ செயலாளர் துரைக்கண்ணன்,

who அறிக்கையின் படி மாசு காரணமாக ஆண்டிற்கு 7 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் ,அதில் 1.5 மில்லியன் பேர் , 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என தெரிவித்தார். போகியில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்றவற்றை எரிப்பதால், சுவாச கோளாறு , ஆஸ்துமா, தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் போகியை விழிப்புணர்வுடன் கொண்டாட வேண்டும் என வலியுறித்தினார்.

தொடர்ந்து பேசிய ஐ.எம்.ஏ நிர்வாகி கார்திக் பிரபு,

கடந்த 2019 ஆம் ஆண்டும் போகியில் எந்தெந்த பொருகளை எரிக்க கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த ஆண்டு மாசு குறைந்ததாகவும், இதனால் ஆண்டு தோறும் போகியின் போது சுவாச கோளாறு உள்ளிட்ட மூச்சு பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 சதவிகிதம் குறைந்தாகவும் கூறினார். இந்த ஆண்டும் மக்கள் போகியன்று பழைய பொருட்களை எரிகாமல் முறையாக கையாள வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க