• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துவங்கிய பிரமாண்ட உணவு – 150 உணவகங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகள்

January 11, 2020

கோயம்புத்துார் விழாவின் ஒரு பகுதியாக, கோவை கொடிசியா திறந்த வெளி மைதானத்தில் மாபெரும் உணவு திருவிழாவினை, கோவை ஓட்டல்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

உணவு திருவிழா, டேஸ்ட்ஆப் கோயமுத்தூர் 2020 ஜனவரி 10 முதல் ஜனவரி 12ம் தேதி வரை மூன்று நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கிறது. கோவையின் வெற்றிகரமான மாபெரும் உணவு தயாரிப்பாளர்கள், அறுசுவை உணவு தருவோர் அணி திரண்டு ஒரே இடத்தில் கூடி மக்களுக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை தரும் திருவிழாவை அளிக்கின்றனர்.

கோவை மண்ணுக்கே உரித்தான மண் மணமிக்க சுவை மட்டுமின்றி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கான தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

கண்கவர் நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதோடு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சாம்பார் இட்லி, அனைத்து வகையான சைவ மற்றும் அசைவ தோசை வகைகள், மட்டன் சுக்கா, மீன் உணவு வகைகள் மற்றும் பிசா முதல் பிரியாணி வரை, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்றவைகளும் சுவைக்கலாம்.

மூன்று நாள் மெகா உணவு திருவிழா 150க்கும் அதிகமான உணவகங்கள் 3000 அதிகமான உணவுவகைகள் பொழுதுபோக்கு திருவிழா இதில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க