• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கவில்லை” – கே.எஸ்.அழகிரி

January 10, 2020

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. பாராளுமன்றத்தில் கூட்டணி வைத்த கட்சிகளுடன் திமுக களம் இறங்கியது. இத்தேர்தலில் அதிமுகவை விட அதிக இடங்களை திமுக கைப்பற்றியது. இதற்கிடையில் நாளை ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் சார்பில் திமுகவுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவி கூட வழங்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்க வில்லை.

ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது. 303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுகவினால் வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க