• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கேவி மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

January 10, 2020 தண்டோரா குழு

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள கேவி மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, குரும்பபாளையம் பகுதியில் உள்ள கேவி மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை முதல் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் மாணவர்கள் நடனமாடியும், பாரம்பரியம் விளையாட்டான கில்லி, கயிறு இழுத்தல், உரியடித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடி பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் மாடுகள், குதிரைகள், மாட்டுவண்டிகள் கொண்டுவரப்பட்டும், பறை இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவில், கல்லூரியின் தாளாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வித்தியா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க