• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தர்பார் படத்தில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் – லைக்கா நிறுவனம்

January 10, 2020 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தர்பார்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி காசு இருந்தால் சிறைக் கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனத்தை கூறுவார்.சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் அதை நீக்க வேண்டும்.காவல் துறை அதிகாரி வினய் குமாரும் தனது அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் செல்வது போல் எங்கேயும் குறிப்பிடவில்லை. எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்.மேலும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து சர்ச்சை குறித்து லைக்கா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எங்களின் தர்பார் படத்தில் கைதிகள் சிறைசாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்டுபடுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிரளது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க