• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்

January 10, 2020 தண்டோரா குழு

நெல்லை கண்ணனை ஜாமினில் விடுவிக்க திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29-ம் தேதி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

இதையடுத்து, அவர் கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான மூன்று முறை ஒத்திவைப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி நசீர் அகமது ஜாமீன் இன்று (ஜனவரி 10) ஜாமீன் வழங்கினார். ஜாமீன் உத்தரவு கிடைத்த பின்னர் நெல்லை கண்ணன் நாளை விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க