• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நீதிமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பொங்கல் விழா

January 10, 2020

கோவையில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் படி தொடர்ந்து பனிரெண்டாவது ஆண்டாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கம் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன்,நிர்மலா தேவி,மற்றும் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக கோவை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சக்தி வேல் ,முதலாவது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவையொட்டி நீதிமன்ற வளாகம் வாழை ,தென்னை ஓலைகள் மற்றும் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தொடர்ந்து வழக்கறிஞர்கள் மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன. பொங்கல் பொங்கியபோது வழக்கறிஞர்கள், ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்க முழங்கியும், குலவையிட்டும் மகிழ்ந்தனர்.இந்த விழாவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பார் கவுன்சில் உறுப்பினர் அருணாச்ச்சலம் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கனகராஜ்,தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க