• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நோட்டு புத்தங்களை கொண்டு திருவள்ளுவர் திருஉருவத்தை உருவாக்கி உலக சாதனை !

January 10, 2020

கோவை கேம்போர்ட் பள்ளி மாணவர்கள் 22,741 நோட்டு புத்தங்களை கொண்டு திருவள்ளுவர் திருஉருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

தமிழை வாழவைத்த அய்யன் வள்ளுவனுக்கு பொங்கல் பண்டிகை நன்றி தெரிவிக்கும் ஒரு மரபாக, தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாக கொண்டாடபட்டு வருகின்றது.
இந்நிலையில் இதனை கொண்டாடும், விதமாக கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றினைந்து உலக சாதனை படைக்கும் ஒரு நிகழ்வாக, நோட்டு புத்தகங்களை கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை உருவாக்கி உள்ளனர்.

உலக சாதனைக்காக படைக்கப்பட்ட இந்த திருவுருவ படத்தில், மொத்தம் 22,741புத்தகங்களை கொண்டும் 14வண்ணங்களை கொண்டும் இந்த திருவள்ளுவரின் உருவ படத்தினை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். கேம்ஃபோர்டு பள்ளியின் நிர்வாகிகள் பூங்கோதை மற்றும் அருள் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் 170பேரின் கூட்டு முயற்சியில் இந்த உலக சாதனை நடைபெற்றது. 1114.82 ஸ்கொயர் மீட்டர் அளவு கொண்ட இந்த திருவள்ளுவரின் உருவ படத்தினை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளனர் மாணவர்கள்.

இந்த திருவுருவ படமானது மொசைக் திருவுருவ படமாகவும், இதுவரை இது போன்ற சாதனை இந்தியாவில் ஏங்கேயும் பதிவிடபடவில்லை என்பது கூடுதல் சிறப்பு. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 2018ம்ஆண்டு அபுதாபியில் 702.8சதுரடியில் உருவாக்கி உள்ளது மட்டுமே சாதனையாக உள்ளது ஆனால் 1114.82 மீட்டர் திருவள்ளுவரின் திருவுருவ படத்தினை செய்து கோவை மாணவர்கள் முறியடித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பூணம் ஸ்யால், மற்றும் மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர.

மேலும் படிக்க