• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு ரீ-டுவீட் செய்து லட்சாதிபதியான ஆயிரம் பேர் – ஆச்சரியப் படுத்திய ஜப்பான் கோடீஸ்வரர்

January 9, 2020 தண்டோரா குழு

ஜப்பானின் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தான் யூசகு. இவர் பல கலைநய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது, கோடிக்கணக்கில் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை வாங்கி சேர்ப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர். கோடீஸ்வரரான இவர், எப்போதும் வித்தியாசமான அணுகுமுறையை சோதனை செய்வதில் ஈடுபடுபவர். பணம் இல்லாத உலகம எப்படி இருக்கும் எனவும், தனிமனிதனின் வாழ்வில் பணத்தின் தாக்கம் என்ன எனவும், தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு அதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையாலும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலாவுக்கு ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்தவர் யூசகு. இப்படி பல வித்தியாசமான அணுகுமுறைகளால் மக்கள் மத்தியில் பிரபலமடையும் யூசகு, மீண்டும் ஒரு புதிய விஷயத்தின் மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜன.,05ம் தேதி பதிவிட்ட டுவிட்டை தன்னை பின்தொடர்பவர்கள் ரீ-டுவிட் செய்தால் அதில் குறிப்பிட்ட பேருக்கு 1 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.65.3 கோடி) பரிசாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். பரிசு என்றதும், உலகம் முழுவதும் பலரும் ரீ-டுவிட் செய்தனர்.அந்த பதிவு, இதுவரை 41.41 லட்சம் ரீடுவிட் மற்றும் 14.04 லட்சம் லைக்ஸை பெற்றுள்ளது. இதில் 1000 பேரை தேர்ந்தெடுக்கும் யுசகு, அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பணத்தை பரிசாக வழங்க இருக்கிறார்.

மேலும் ஏன் இவ்வாறு தான் செய்கிறேன் என்பதை யூ-ட்யூப் வீடியோ மூலம் தெரிவிப்பதாக கூறியவர். அந்த வீடியோவில், இந்தப்பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக்கிறது என்பதை அறியும் முயற்சி. இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க