• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவையில் பேரணி

January 9, 2020

ஸ்ரீ விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் பேரணி நடைபெற்றது.

ஸ்ரீ விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவானது தேசிய இளைஞர் தின விழாவாக அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் நாடெங்கும் கொண்டாடி வருகின்றது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சுவாமி விவேகானந்தரின் தேசிய தெய்வீக நற்பண்புகளை மாணவர்களிடம் எடுத்துரைக்கும் வண்ணம் சுவாமி விவேகானந்தர் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்வை ஒட்டி கோவை மாநகரில் அனைத்து கல்லூரி மாணவ மாணவியர், கல்வியாளர்கள் ,பங்கேற்கும் பேரணியானது அரசினர் மகளிர் பாலிடெக்னிக் முன்பு தொடங்கி வ உ சி பூங்கா வரைக்கும் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் கனகசபாபதி அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் மாநில அமைப்பாளர் குமரேஷ், தென் பாரத அமைப்பாளர் ஆனந்த் ,மாநில இணைச்செயலாளர் அரவிந்தன், தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வி, சுப்ரஜா மாவட்ட அமைப்பாளர் சிவசூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க