• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடத் தடை! – உயர் நீதிமன்றம் உத்தரவு

January 7, 2020 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கல் ரிலீஸாக நாளை மறுநாள் வரவிருக்கும் ‘தர்பார்’ படம். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கிடையில்,இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் “நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் இருந்து, எங்கள் நிறுவனம் மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றது. அதுமட்டுமல்லாமல் 2.O படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கினோம். அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் ‘தர்பார் ’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் ”. என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் கடந்த 3-ம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது, அப்போது லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மலேஷிய நிறுவனம் கூறுவது போல் எந்த கடனும் லைக்கா நிறுவனம் தரப்பில் தர வேண்டியது இல்லை. மனுதரார் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்த்துள்ளார். மனுதரார் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகள் தவறானது மேலும் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கை மனுதரார் தொடர்ந்துள்ளார். எனவே தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவிக்கபட்டது. இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயசந்திரன், தர்பார் திரைப்படத்தை படத்தை மலேஷியா நாட்டில் வெளியிட தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

மலேஷியாவில் படத்தை வெளியிட வேண்டும் என்றால் 4. 9 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யும் வரை படத்தை மலேஷியாவில் வெளியிடக் கூடாது.பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் மலேஷியாவில் படத்தை வெளியிடலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவின் மூலமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெளியிட எந்த விதமான தடையும் இல்லை. மலேசியவை தவிர பிற நாடுகளிலும் வெளியிட தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க