• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்ததாரர் புகார்; 35 கோடி ரூபாய்கான டெண்டரை ரத்து செய்த நெடுஞ்சாலை துறை

January 6, 2020

ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து 35 கோடி ரூபாய்கான டெண்டரை நெடுஞ்சாலை துறை அலுவலகம் ரத்து செய்தது.

கூடலூர் சேரம்பாடி பகுதியை சேர்ந்த ஒப்பந்தகாரர் ராயின். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூடலூர் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளி மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. கூடலூரில் இருந்து சேரம்பாடிவரை 30 இடங்களில் சாலைகள் மற்றும் தடுப்பு சுவர்களை சரி செய்ய 35 கோடிக்கு மூடிய டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில் தனது அலைபேசியை ஹாக் செய்யபட்டு டெண்டர் தொடர்பான அனைத்து தகவல் பறிமாற்றங்களும் வெளியிட பட்டுள்ளதாக கூறினார். மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த சிபி, தேவாலா பகுதியை சேர்ந்த அனிஷ் ஆகியோர் டெண்டரை பெற தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டுமென மிரட்டுவதாக குற்றம் சாடினார். இதனை தொடர்ந்து கோவை திருச்சி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். இந்த புகார் மனுவை பெற்று கொண்ட கண்காணிப்பாளர் சுரேஷ் 35 கோடி ரூபாய்கான டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க