• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யோகாவில் தனிநபர் உலக சாதனை

January 4, 2020

யோகாசனத்தில் 11 நாட்களில் 1001 ஆசனங்கள் செய்து உடுமலையை சார்ந்த குணசேகரன் உலக சாதனையை படைத்துள்ளார்.

உடுமலைபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் இவர் சிறுவயதில் இருந்தே யோகசனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். யோகாவில் உலக அளவில் சாதனை மேற்கொள்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். மேலும் இவர் தனியாக யோகவிற்கான பள்ளிகள் ஆரம்பித்து ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுத்து வந்துள்ளார்.

சமீபத்தில் உலக சாதனை படைப்பதற்காக பல்வேறு யோகாசனம் செய்து விருதுகள் பெற்றுள்ளார் மேலும் தனிநபர் உலக சாதனையாக கடந்த 10 நாட்களில் 962 யோகசனங்களும் இன்று கடைசி நாளாக கோவை வைசால் வீதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மீதமுள்ள 39 ஆசனங்கள் செய்து தனிநபர் உலக சாதனையை நிகழ்த்தி உள்ளார். பதினோறு நாட்களில் இவ்வளவு ஆசனங்கள் செய்வது உலகில் முதல் முறை எனவும் இதனை எலைட் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ்,இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ்கள் அளித்தனர்.இதற்கு முன் 2012ல் தொடர் யோகாசன 43 மணி நேரம் செய்து சாதனை செய்துள்ளதாகவும் 2016ல் அறுபத்தி ஒன்பது மணி நேரம் யோகாசனம் செய்து தனது முந்தய சாதனையை தானே முறியடித்ததாகவும், மொத்தம் என்பது லட்சம் ஆசனங்கள் இருப்பதாக வும் குணசேகரன் தெரிவித்தார். மேலும் அவர் யோகாசனம் செய்து விருது வாங்கிய சான்றிதழ்களை மக்களின் பார்வைக்கு வைத்திருந்து பார்வையாளர்களிடயே வியப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க