• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய கோவை வாலிபர் கைது !

January 3, 2020 தண்டோரா குழு

தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்த சிராஜுதீன் என்பவர் சமூக ஊடகம் மூலம் தமிழக முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களையும், மறைந்த முன்னால் முதல்வர்கள் எம்,ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளை பரப்புவதாக வந்த தகவல்களை அடுத்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிராஜ்தீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி கோவை மத்திய மண்டல செயலாளர் என்பது தெரியவந்தது. மேலும் இவரது முகநூல் பக்கத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் செய்துள்ளதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். மேலும் கோவை சுந்திராபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிராஜ்தீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க