• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் – நீளமான தேசிய கொடி பிடித்து போராட்டம்

January 3, 2020

கோவை மரக்கடை நவாப் ஹக்கீம் சாலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மரக்கடை சந்திப்பில் தொடங்கி வெரைடி ஹால் வரைக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்குபெற்றனர். சாலையில் இருபுறமும் கைகோர்த்து No CAA – No NRC என்ற முழக்கங்கள் எழுப்பினார். மேலும் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பிடித்தும் மற்றும் கையில் கொடி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது. மதியம் இறை தொழுகை முடித்துவிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்திய அரசு உடனடியாக மசோதவை திரும்பபெற வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் நகரின் முக்கிய பகுதி என்பதால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சீர் செய்தனர்.

மேலும் படிக்க