• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

January 3, 2020

சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவை குட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே அமைச்சகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தென்னக ரயில்வே ஊழியர்கள் ஜனவரி 2 முதல் வரும் 7ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் வரும் 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக கோட்ட தலைமை அலுவலங்களில் பெருந்திறல் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோவை கூட்டு ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை தலைமை கிளைச் செயலாளர் ஜோன் தலைமை வைத்தால் ஏராளமான ஊழியர்கள்
ஊழியர்கள் பங்கேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கும் நோக்கில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் படிக்க