• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகனுடன் சேர்த்து வைத்து தப்பா பேசுறாங்க..! விஷால் மீது ‘மீ-டூ’ புகார் கொடுத்த பெண் குமுறல்

December 31, 2019 தண்டோரா குழு

தன் மகளை சமூக வலைதளங்களில் தவறாக சித்தறித்து வருவதாகவும், மகனுடன் சேர்த்து வைத்து தன்னை தவறாக பேசுவதாகவும் கூறி நடிகர் விஷால் மீது ‘மீ-டூ’ புகார் கொடுத்த பெண் ஒருவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி. இவருக்கு திருமண வயதில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஷால் மீது மீடூ புகார் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், தன்னையும், தனது மகன் மற்றும் மகளையும் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருவதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த சூழலில், மகளை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், மகனுடன் சேர்த்து வைத்தி அசிங்கப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க