• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜனவரி 3 ந்தேதி பி.எஸ்.ஜி.குழுமங்கள் சார்பில் மாபெரும் இசை கச்சேரி விழா

December 28, 2019

கோவை விழாவின் ஒரு பகுதியாக பி.எஸ்.ஜி.,மருத்துவ கல்லுாரியில் காதம்பரி,எனும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன்,
பி.எஸ்.ஜி.பள்ளியின் செயலர் நந்த கோபாலன்,பப்ளிக் பள்ளியின் நிர்வாகி கிரீஷ் ,மருந்தியல் துறையின் தலைவர் புவனேஸ்வரி மற்றும் பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் இசைத்துறை தலைவர் விஜய ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள் சார்பாக ,தொடர்ந்து காதம்பரி இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் வரை கலந்து கொண்டு நடனம்,கர்நாடகா சங்கீதம் மற்றும் திரை இசை பாடல்களை பாட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் விழாவில் ஸ்ரீமதி கருணா சாகரியின் பரதநாட்டியம்,பிரபல நித்ய ஸ்ரீ மகாதேவனின் இசை கச்சேரி,ராஜேஷ் வைத்யா குழுவினரின் பாரம்பரிய இசையை சினிமா பாடல்களுடன் கலந்து பாடும் கச்சேரி என இசை தொடர்பான அனைத்து பாரம்பரிய கலைகளும் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க