• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பள்ளிவாசல் முன்பாக மனிதசங்கிலி போராட்டம்

December 27, 2019

குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும். 3ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பள்ளிவாசல் முன்பாக மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்தபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த சட்டத்திற்க்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினார்கள். இதனால் குணியமுத்தூர் பாலக்காடு சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்படைந்து. மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட குணியமுத்தூர் பள்ளிவாசல் இமாம் மாலிக் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது.

இந்த சட்டம் இஸ்லாமிரகளுக்கு மட்டும் இன்றி இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம். ஆகவே இந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்திற்க்கு ஆதரவாக செயல்படும் இஸ்லாமியர்கள் இந்தசட்டத்தை பற்றிய அறியாமையினால் ஆதரவாக செயல்படுவதாக கூறினார்.

மேலும் படிக்க