• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடம்

December 26, 2019

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதை தடுப்பதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். அதுபோல் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர் இதுபோக ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை சார்ந்த கூட்டங்களும் பல்வேறு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது.

மேலும் அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் ஆட்சியர் அலுவலக வழியாக வந்து செல்கிறார்கள்.இதனால் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் தவித்த மக்களுக்கு கலெக்டர் அலுவலகம் பின்புறம் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தனி கேட் அமைக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று வந்த பாதையும் அடைக்கப்பட்டது இனி ஆட்சியர் அலுவலகத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்த முடியாது.

மேலும் படிக்க