• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வளைய சூரிய கிரகணத்தை காண கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் சிறப்பு ஏற்பாடு

December 25, 2019

நாளை தெரியவுள்ள வளைய சூரிய கிரகணத்தை காண கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை வளைய சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும். நாளை நிகழும் வளைவடிவ சூரிய கிரகணம் கோவை, அவிநாசி,ஈரோடு,கரூர், திருப்பூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் சிறப்பான முறையில் தெரியும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காணும் வகையில் தோன்றவுள்ள இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட கண்ணால் பார்க்க கூடாது. சூரியனின் பெரும் பகுதியை சந்திரன் உள்ளடக்கியிருந்தாலும் பார்வை குறைபாட்டுக்கும் வழிவகுக்கும்.

இதற்கிடையில் பள்ளி கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் சூரிய கிரகணத்தை காணும் வகையில் பிரக்தரு சயின்ஸ் சொசைட்டி, கோவை ஏஇஎஸ் டெக்னாலஜீஸ் ஆகியவற்றோடு இணைந்து சிறப்பு கருவிகள் மூலம் சூரிய கிரகணத்தை காண ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் அறிவியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து சூரிய கிரகணம் குறித்து விளக்கவுள்ளனர். பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு விளக்க மளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க