• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து 2 பேர் பலி – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

December 24, 2019

மேட்டுப்பாளையத்தில் அரசு பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பஸ் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயம் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் இருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று மாலை கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குட்டையூர் மேடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் முன் சக்கரத்தில் சிக்கி கொண்டார். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் வந்ததால் எதிர்பாராதவிதமாக இரண்டு பஸ்களும் மோதிக்கொண்டது. இதில் பஸ் ஓட்டுனர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு பிறகு ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வைக்கின்றனர்.

மேலும் படிக்க