• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செட்டிபாளையம் பகுதியில் விதி முறைகளை மீறி செயல் பட்டுவரும் கல் குவாரியை மூடக் கோரி மனு

December 23, 2019 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் பகுதியில் விதி முறைகளை மீறி செயல் பட்டுவரும் கல் குவாரியை மூடக் கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஓராட்டுகுப்பை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்திற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் இந்த கல் குவாரியால் அப்பகுதி கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், இந்த குவாரியை மூட வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, குடியிருப்பு பகுதியில் குவாரி அமைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும்,விளைச்சல் முழுவதிலும் தூசி பரவி விடுவதால் விவசாயம் செய்ய முடியாமல் சிரம்மப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.மேலும் குவாரியில் வெடி வைப்பதனால், அருகில் உள்ள வீடுகள் சேதமடைவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க