• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கலப்பட டீ தூள் தயாரிக்கும் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

December 21, 2019 தண்டோரா குழு

மாநகரின் உள்ள கடைகளில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி கலப்பட டீத்தூள்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்நிலையில் கோவை ஈச்சனாரி பகுதியில் டீத்தூளை கலப்படம் செய்து பாக்ககெட்டுகளாக மாற்றி நகரின் முக்கிய பகுதிகளில் விநியோகம் செய்து வருவதாக உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவடம உணவுபாதுக்காப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ஈச்சானாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கலப்பட டீத்தூள் இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு, இயந்திரம் மூலம் அவற்றை பாக்கெட்டுகளாக மாற்றி கடைகளில் விநியோகம் செய்து வந்ததும் கண்டறிப்பட்டது. இதனையடுத்து 4.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு டன் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பாக்கெட்டுகளாக மாற்ற பயன்படுத்தப்பட்ட ஒன்றரை லட்சம் இயந்திரமும் பறிமுதல் செய்ப்பட்டது. மேலும் இந்த குடோனின் உரிமையாளர் குணியமுத்தூரை சேர்ந்த ஷெரிப் என தெரியவருகிறது.சம்பவ இடத்தில் டீ தூள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க