• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

December 20, 2019 தண்டோரா குழு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு நிரைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதிலும் பல்வேறு கட்சியினர், இஸ்லாம் அமைப்புகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில்
இச்சட்ட மசோதாவை கண்டித்து கோவை அனைத்து முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அனைத்து சுன்னத் ஜமாத் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் வீடுகளில் கருப்பு கொடியேற்றும் போராட்டம் அறிவித்திருந்தது. இதனையடுத்து,கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புகடை உட்பட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆத்துப்பாலத்தில் மாபெரும் மனித சங்கிலி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பங்குபெற்றனர்.கோவையில் மாநகரத்தின் முக்கிய பகுதிகளான ஆத்துப்பாலம், உக்கடம், குனியமுத்தூர் சுந்தரபுரம் பகுதிகளை இணைக்க கூடிய சாலையான ஆத்துப்பாலம் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்காக பொள்ளாச்சி, பாலக்காடு மிக பிரதானமான சாலை மூட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர்.ஜல்லிகட்டு போராட்டத்தில் நடைபெற்றது போன்று செல்போன் மூலம் ஒளி ஏற்படுத்தி போராட்டத்தை வெளிப்படுத்தினர். உடனடியாக திருத்தப்பட்ட மசோதவை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க